இன்றைய ராசிபலன்: 15.12.2020: கார்த்திகை மாதம் 30ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று

சார்வரி வருடம், கார்த்திகை மாதம் 30ம் தேதி, ரபியுல் ஆகிர் 29ம் தேதி, 15.12.2020, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி இரவு 8:52 வரை, அதன்பின் துவிதியை திதி, மூலம் நட்சத்திரம் இரவு 11:38 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. சூலம் : வடக்கு

பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி பொது : சந்திர தரிசனம், முருகன் வழிபாடு

மேஷம்: அசுவினி: சகோதர, சகோதரிகளுக்குள் ஒற்றுமையும் நன்மையும் ஏற்படும். பரணி: நெருங்கிய நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கார்த்திகை 1: எதிர்பாலின நட்புகளால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தேவையற்ற பிரச்னை ஏற்படாமல் கவனமாக இருங்கள் ரோகிணி: வாக்குவாதம் காரணமாகத் தொல்லை ஏற்பட வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் 1,2: வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புக் கூடிவரும்.

மிதுனம் : மிருகசீரிடம், 3,4: நெருங்கிய உறவினருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். திருவாதிரை: மனநிறைவு தரும் செயல்களை செய்து திருப்தி அடைவீர்கள். புனர்பூசம்: 1,2,3: பெரியோரின் ஆசிகளை பெறுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.

கடகம்: புனர்பூசம்,4: சிலருக்கு வாழ்க்கைத் துணைவரால் மிகுந்த நலம் உண்டாகும். பூசம்: வியாபாரிகள் வாக்குவாதங்களை தவிர்த்தால் நன்மை ஏற்படும். ஆயில்யம்: திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மனம் குளிரும்.

சிம்மம்: மகம்: சக ஊழியர்களால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். நலம் விளையும். பூரம்: சிந்தித்து செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு யோகம் வரும். உத்திரம்,1: உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

கன்னி: உத்திரம்,2,3,4: தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கூடும். மன நிறைவு வரும். அஸ்தம்: அலுவலகத்தில் இருந்து வந்த நிம்மதியற்ற சூழ்நிலை மாறும். சித்திரை, 1,2: தந்தையாலும், அரசாங்கத்தாலும் கூடுதல் நலம் காண்பீர்கள்.

துலாம்: சித்திரை, 3,4: எதிர்காலம் சம்பந்தமான எண்ணம் ஒன்று நிறைவேறும். சுவாதி: பிள்ளைகள் மேடை ஏறி கைதட்டல் வாங்குவதால் மகிழ்வீர்கள். விசாகம் 1,2,3: பணியிடத்தில் உங்களுக்குப் பெருமை தரும் நிகழ்ச்சி உண்டு.

விருச்சிகம்: விசாகம்,4: குடும்பத்தில் யாருக்கேனும் சுபநிகழ்ச்சி நடைபெறும் சூழல் ஏற்படும். அனுஷம்: பேச்சினால் ஏற்பட்ட பிரச்னைகளை பேச்சினாலேயே தீர்ப்பீர்கள். கேட்டை: புதிய முயற்சிகளாலும், திட்டத்தாலும் நன்மையை அடைவீர்கள்.

தனுசு: மூலம்: நண்பர்கள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூராடம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்திராடம்,1: பணியிடத்தில் பெரிய பொறுப்புகளை நிறைவேற்றி வெல்வீர்கள்.

மகரம்: உத்திராடம்,2,3,4: மாணவர்கள் புதுமை படைப்பீர்கள். தீமை விலகக்கூடும். திருவோணம்: மனதிற்கு இனிய சம்பவங்கள் இன்று உங்களுக்கு நிகழும். அவிட்டம்,1,2: உடன்பிறந்தவர்களால் நன்மையும், லாபமும் உண்டாகும்.

கும்பம்: அவிட்டம், 3,4: எதிர்ப்புகள் விலகும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சதயம்: சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். பூரட்டாதி,1,2,3: பங்குச்சந்தை, கமிஷன் போன்ற வகைகளில் பணம் வரும்.

மீனம்: பூரட்டாதி, 4: அலுவலகத்தில் எதிரிகள் விலகுவார்கள். நண்பர்கள் உதவுவர். உத்திரட்டாதி: உங்களின் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரியின் ஆதரவு இருக்கும். ரேவதி: அரசு வழி உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசி உண்டு.