இன்றைய ராசிபலன்: 17.12.2020: மார்கழி மாதம் 2ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று

சார்வரி வருடம், மார்கழி மாதம் 2ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 2ம் தேதி, 17.12.2020, வியாழக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி மாலை 6:35 வரை, அதன்பின் சதுர்த்தி திதி, உத்திராடம் நட்சத்திரம் இரவு 10:45 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம் சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு

மேஷம்: செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் பொருளாதாரம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்: பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். கடன் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பெரியவர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.

மிதுனம்: எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகளும், அதனால் உடல் சோர்வும் நேரிடும். வாகனப் பயணங்களில் பொறுமையாக செல்ல வேண்டும். வாரிசுகளின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பங்காளி வகை உறவுகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்: கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். புதிய நபர்களின் நட்பும், அறிமுகமும் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மம்: தொழில் தொடர்பான புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்ட பயணங்களை மேற்கொண்டு காரியசித்தி அடைவீர்கள். குடும்ப நபர்களின் உணர்வுகளை அறிந்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முடியும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவதற்கான எண்ணங்கள் மேம்படும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் தோன்றும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மூலம் இலாபம் மேம்படும்.

துலாம்: மனதில் இருக்கும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் சில அலைச்சல்கள் ஏற்பட்டு மறையும். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வாக காணப்படுவீர்கள். பங்குதாரர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் உங்களின் பேச்சிற்கு மரியாதை அதிகரிக்கும்.

விருச்சகம்: நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

தனுசு: எளிதாக முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவடையும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும். மாணவர்கள் வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் சுபச்செய்திகளின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும்.

மகரம்: பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். வெளியூரிலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாரிசுகளின் உதவிகள் மனமகிழ்ச்சியை அளிக்கும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள்.

கும்பம்: உத்தியோகத்தில் பொறுப்புகளும், அலைச்சல்களும் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இலாபம் உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வாழ்க்கை பற்றிய சில நுணுக்கங்களை புரிந்துக்கொள்வீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மனதிற்கு புத்துணர்ச்சியையும், தெளிவையும் ஏற்படுத்தும்.

மீனம்: மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணியில் ஒருவிதமான மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.