இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!

சில பகுதிகள் முடக்கம்

இன்று (17) காலை 06 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

COVID – 19 வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அக்கரைப்பற்று – 5 ஆம் பிரிவு, அக்கரைப்பற்று – 14 ஆம் பிரிவு மற்றும் நகர்ப்பகுதிகள் – 3 ஆகியன முடக்கப்பட்டுள்ளன.

அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் பாலமுனை முதலாம் பிரிவு, ஒலுவில் – 2 ஆம் பிரிவு மற்றும் அட்டாளைச்சேனை – 8ஆம் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் ஆலையடிவேம்பு – 8/1, ஆலையடிவேம்பு – 8/3, ஆலையடிவேம்பு – 9 ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மொனராகலை மாவட்டத்தின் அலுபொத்த கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.