யா.ழில் மா.ணவிகள் இருவருக்கு கொ.ரோனா தொ.ற்று!

கொ.ரோனா தொ.ற்று!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் கொத்தணியில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மா.ணவிகள் இருவரும் இருவரும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிய வந்ததது.

இதனையடுத்து கல்லூரியின் 80க்கும் அதிகமானோரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்கும் மா.ணவிகள் இருவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொ.ரோனா தொ.ற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப் பாடசாலையில் தரம் ஏழு மற்றும் தரம் ஒன்பது ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் சகோதரிகளான இருவருக்கே தொ.ற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மா.ணவிகள் இருவரும், மருதனார்மடம் தொ.ற்றாளருடன் தொடர்பைப் பேணியவர்களுள் இரண்டாவது நாள் இனங்காணப்பட்ட கீரிமலை கூவில் பகுதியைச் சேர்ந்த தொற்றாளரின் மக.ள்கள் என அறிய முடிகின்றது.

மா.ணவிகள் இருவரும் கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளதுடன், ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மா.ணவி கடந்த சனிக்கிழமையும் பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சை ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த மா.ணவிகளின் வகுப்பைச் சேர்ந்த மா.ணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் என எண்பதுக்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதரத்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.