இன்றைய ராசிபலன்: 21.12.2020: மார்கழி மாதம் 6ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று!

சார்வரி வருடம், மார்கழி மாதம் 6ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 6ம் தேதி,
21.12.2020, திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:48 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் நள்ளிரவு 2:36 வரை,
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மகம்
பொது : சிவன் வழிபாடு, கரிநாள்

மேஷம்:

தடைபட்டு இருந்துவந்த காரியங்கள் இனிதே நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். வாக்குவாதங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழில் முனைவதற்கான எண்ணங்கள் மேலோங்கும்.

ரிஷபம்:

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். இறைவழிபாடு தொடர்பான செயல்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். உறவினர்களின் உடல்நலத்தில் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்:

கெளரவ பதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். சுபநிகழ்ச்சிக்கான சுபச்செய்திகள் தேடி வரும். மனதில் ஒருவிதமான சஞ்சல எண்ணங்கள் தோன்றும்.

கடகம்:

உடல் சோர்வினால் செய்யும் பணியில் மந்தத்தன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திட்டமிட்ட பணிகள் நிறைவடைய காலதாமதம் ஏற்படும். பல சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் காணப்படும். பிள்ளைகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும்.

சிம்மம்:

நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். பழைய கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெற முடியும்.

 

கன்னி:

தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும்.

துலாம்:

தைரியத்துடன் திட்டமிட்ட பணிகளை பல தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சகம்:

உறவுகளிடம் மனம் விட்டுப்பேசுவது நல்லது. தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு:

விடாப்பிடியாக இருந்து சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.

மகரம்:

வீண் செலவுகளை குறைக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் நன்மை உண்டாகும். கூட்டாளிகளின் உதவிகளால் தொழிலில் இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

கும்பம்:

புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் இலாபம் அதிகரிக்கும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் அகலும்.

மீனம்:

தொழில் முனைபவர்களுக்கு எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும். அரசு செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.