சனிப்பெயர்ச்சி பலன்கள்… 2020-2023.. எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்?

சனிப்பெயர்ச்சி பலன்கள்… 2020-2023..

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், ஒளி நாயகனான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது, வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனிதேவர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி (26.12.2020) சனிதேவர் துவாதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது சனிக்கிழமையன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார்.

ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரை பொருத்தவரை எல்லோரும் சமம்.

அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே.

அதேபோல் கஷ்ட, நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள்.

நாம் செய்யும் செயல்களின் மூலமே நம் வாழ்க்கையில் நிகழும் செயல்கள் யாவும் நிர்ணயிக்கப்படுகின்றது. நவகிரக சுபர்களின் பார்வைகள் இருக்கும் பட்சத்தில் சுப பலன்களை அனுபவிக்க இயலும். அதேபோல் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் அசுப பலன்களையும் அனுபவிக்க வேண்டிய சூழலும் உண்டாகின்றது.

அந்த வகையில் வரும் சனிப்பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? யார்?… என்று பார்க்கலாம்.

மிதுனம்

தனுசு

மகரம்

கும்பம்

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்கள் மட்டுமே நடக்கும் என்று கூற இயலாது.

நிகழும் அசுப பலன்களை நம்மால் முழுவதும் தவிர்க்க இயலாது. ஆனால், சில செயல்களின் மூலம் நமக்கு உண்டாகும் தீவினைகளின் இன்னல்களின் வீரியத்தை குறைக்க இயலும்.

இதைதான் நம் முன்னோர்கள் மதியால் விதியை வெல்ல இயலும் என்று கூறினார்கள்.

இங்கு மதியானது இறை வழிபாட்டிற்கு உண்டான பொருட்கள், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதாலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை அளிப்பதாலும், பெரியோர்களிடம் ஆசி பெறுவதாலும் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

கிரகங்களின் மூலம் உண்டாகும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப நவகிரகங்கள் அளிப்பார்கள். அதாவது திசாபுத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால் அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரவல்லவர்கள்.