சித்ராவை தொடர்ந்து ரக்ஷிதா?! மிகுந்த வேதனையில் விஜய் டிவி நடிகை செய்த செயல்.!

நடிகை ரக்ஷிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. சரவணன் மீனாட்சி அனைத்து சீசன்களிலும் மீனாட்சியாக நடித்தவர் ரக்ஷிதா.

சீரியல் மட்டுமின்றி, 2015 ஆம் ஆண்டு கருணாகரன் நடிப்பில் வெளியான உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் பாரிஜாதா என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால், வெள்ளித்திரையில் இவர் பிரபலமாகவில்லை.

சில நாட்கள் முன்பு சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைந்ததால், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்துவருகிறார். தொடர்ந்து விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் களை காட்டுகிறது.

சமீபத்தில் ரஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிட்ட லைவ் வீடியோவில், “சித்ரா குறித்து சோகமாக பேசியுள்ளார். எங்களில் ஒருத்தியை இப்படி தவறாக சித்தரிப்பதை தாங்க முடியவில்லை.

ஏன் சினிமா துறையில் நடிகைகள் இப்படித்தான் இருப்பார்கள் என முத்திரை குத்த காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.? சித்ரா இழப்பில் இருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. சித்ராவும், நானும் ஒரே மாதிரி இருக்கிறோம் என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன், சித்ராவே ஒருமுறை என்னிடம் கூறியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)