பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் முல்லை.! இதோ படப்பிடிப்பு தள புகைப்படம்.!

முல்லை

மக்கள் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, பல்வேறு தொலைக்காட்சிகளில் பல்வேறு பணிகளை செய்து இறுதியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி என்ற பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சித்ரா.

இவர் எங்கு இருந்தாலும் மிகவும் துடிப்போடு காணப்படுவார். இவருடைய சுறுசுறுப்பு உடன் இருப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த ஒருத்தியாக திகழ்ந்தவர். இவருக்கு ரசிகர் பட்டாளமும் மிக அதிகம்.

இந்நிலையில், அவரது எதிர்பாராத மரணம் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் அவருக்கு பல ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால், சித்ராவே இப்படி ஒரு முடிவை எடுத்தது யாரும் எதிர்பார்த்திராத ஒரு விஷயம்.

இத்தகைய சூழலில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்ததாக முல்லை கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. முல்லையின் நெருங்கிய தோழியான சரண்யாவை அதில் நடிக்க வைக்க தொலைக்காட்சி குழுவினர் முடிவெடுத்து அவரிடம் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர்.

ஆனால், சரண்யா முறையாக நடிக்க தன்னால் முடியாது என்றும், அதை சித்ராவால் மட்டுமே நிறைவு பெற வைக்க முடியும் என்றும் கூறிவிட்டார். எனவே அடுத்ததாக முல்லை கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதிக்கு சகோதரியாக நடிக்கும் காவியா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.