இன்றைய ராசிபலன்: 24.12.2020: மார்கழி மாதம் 9ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று!


சார்வரி வருடம், மார்கழி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 9ம் தேதி,
24.12.2020, வியாழக்கிழமை, வளர்பிறை, தசமி திதி நள்ளிரவு 1:12 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, ரேவதி நட்சத்திரம் காலை 7:05 வரை,
அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்
பொது : குருவாயூரப்பன் வழிபாடு, கரிநாள்

மேஷம்:

வழக்கு விவகாரங்களில் இழுபறியான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கூட்டாளிகளின் அனுகூலத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீர்நிலையம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் பிரச்சனைகளால் மனவருத்தங்கள் உண்டாகும்.

ரிஷபம்:

நண்பர்களிடம் நிதானம் வேண்டும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.

மிதுனம்:

புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் தேவையற்ற அலைச்சல்களால் விரயங்கள் ஏற்படும்.

கடகம்:

சமூகச்சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாகன வசதிகள் மேம்படும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும்.

சிம்மம்:

தொழில் திறமைகளின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருப்பவர்களுக்கு இலாபம் மேம்படும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.

கன்னி:

உறவுகளிடம் அமைதிப்போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்:

மக்கள் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சகம்:

தாய்மாமன் உறவுகளால் அனுகூலம் உண்டாகும். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும்.

தனுசு:

பயணங்களின் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வாரிசுகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். உடல் சோர்வால் எடுத்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும். சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும்.

மகரம்:

பொதுக்கூட்ட பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.

கும்பம்:

பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இசைக்கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.

மீனம்:

பேச்சுத்திறமைகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நம்பிக்கை அதிகரிக்கும்.