இன்றைய ராசிபலன்: 25.12.2020: மார்கழி மாதம் 10ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று!

சார்வரி வருடம், மார்கழி மாதம் 10ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 10ம் தேதி,
25.12.2020, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி நள்ளிரவு 3:23 வரை,
அதன்பின் துவாதசி திதி, அசுவினி நட்சத்திரம் காலை 9:38 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சித்திரை
பொது : வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ்.

மேஷம்:

குடும்ப நபர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். வெளியூர் வேலை முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்:

குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். மனதில் பழைய சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும்.

மிதுனம்:

பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். செய்தொழிலில் பல தடைகளை தாண்டி எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும்.

கடகம்:

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஆதரவான சூழல் அமையும்.

சிம்மம்:

தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணி தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். எதிர்பார்த்த பணவரவுகளால் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

 

கன்னி:

நினைத்த செயல்களை முடிப்பதில் இழுபறிகள் உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். சொத்து விவகாரங்களில் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். சாலை பயணங்களில் நிதானம் வேண்டும். முயற்சிக்கேற்ற பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.

துலாம்:

புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் உதவிகள் மூலம் பொருளாதாரம் மேன்மை அடையும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும்.

விருச்சகம்:

மூத்த உடன்பிறப்புகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சமூகப்பணிகளின் மூலம் மேன்மை உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.

தனுசு:

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஆதரவான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் மேம்படும். புத்துணர்ச்சியுடன் புதிய செயலை தொடங்குவீர்கள். தொழில் சம்பந்தமான பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

மகரம்:

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தொழிலில் அரசு சம்பந்தமான ஆதரவு கிடைக்கும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பேசி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்:

நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிக்க முயல்வீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பெரியோர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்தியான சூழல் உண்டாகும்.

மீனம்:

வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். மனை சம்பந்தமான விஷயங்களில் நிதானம் வேண்டும். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த செயல்கள் முடிய காலதாமதம் உண்டாகும்.