பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றவர்களுக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்று!

பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் நேற்று கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளிகளில் பிரித்தானியாவில் இருந்து வந்த மூவரும் அடங்கியுள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 592 பேர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் மூவர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 39 ஆயிரத்து 231 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 30 ஆயிரத்து 568 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 8 ஆயிரத்து 478 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.