இன்று திறக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம்! இரண்டு நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

கட்டுநாயக்க விமான நிலையம்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையை திறக்கும் நடவடிக்கை இன்றைய தினம் முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் ரஷ்ய நாட்டவர்கள் 300 பேருடன் இன்றைய தினம் இலங்கை வரவிருந்த ரஷ்ய நாட்டு விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பரவும் கொரோனா வைரஸ் தொற்றின் மாற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனினும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் யுக்ரேன் நாட்டில் இருந்து 2 விமானங்களில் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வரவுள்ளார் என விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.