ஏரியில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி பிரபல நடிகர் மரணம் !! .. அதிர்ச்சியில் திரைத்துறையினர்.!!

தண்ணீரில் மூழ்கி பிரபல நடிகர் மரணம்

மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அணில். நாடக நடிகரான இவர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபல மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன்பிறகு மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

கடந்த சில வருடங்களாக இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறி உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தில் இவர் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் அனைவராலும் பேசப்பட்டது.

இந்நிலையில், பீஸ் என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தொடுபுழா என்ற இடத்தில் நடைபெற்றுவருகிறது.

நேற்று நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ளமலங்கரா அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். எதிர்பாராவிதமாக ஆழமான பகுதியில் சிக்கி அனில் தண்ணீரில் மூழ்கினார்.

நண்பர்கள் அவரை உடனடியாக மீட்க முயன்றனர். ஆழமான பகுதி என்பதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. சில நிமிடங்கள் கழித்து அவரை மீட்டு நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.