தூண்டில்போட்டு தேடும் தனிப்படை.. திருமணம் முடிந்த 5 மாதத்தில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

இந்தியா

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை உச்சிப்பொத்தை கிராமத்தை சார்ந்தவர் வேல்சாமி. இவரது மகள் பூங்கோதை (வயது 21). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அங்கு மேற்பார்வையாளராக ஒடிசா மாநிலத்தை சார்ந்த ஜோகிந்தர் (வயது 27) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறவே, இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் திருப்பூரில் பணியாற்ற பிடிக்காமல் சுரண்டையில் உள்ள கோட்டை தெருவில் குடியேறியுள்ளனர்.

ஜோகிந்தர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், கணவன் – மனைவியிடையே அவ்வப்போது த.க.ராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏ.ற்பட்ட தக.ராறுக்கு பின்னர் பூங்கோதை உறங்க சென்றுள்ளார்.

ஆனால், ஆ.த்.தி.ரத்தில் இருந்த ஜோகிந்தர் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.துவிட்டு, இரவோடு இரவாக வீட்டின் கதவை பூட்டிவிட்டு தப்பி சென்றுள்ளான். இந்த விஷயம் தொடர்பாக சுரண்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு ஜோகிந்தரை தேடி வருகின்றனர்.