நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனால், கைவிடமாட்டான் என்பதை உறுதியாக்கிய இன்ப அதிர்ச்சி.!

இந்தியா

கேரள மாநிலத்திலுள்ள காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் நவநீத சஞ்சீவன். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் துபாயில் வசித்து பணியாற்றி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு வேலையின்மை ஏற்பட்ட நிலையில், சஞ்சீவனின் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சஞ்சீவனின் குடும்பத்தினரும் வறுமைக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் க.டு.மை.யான ம.ன உ.ளை.ச்.ச.லி.ல் இருந்த சஞ்சீவன், தன்னை நம்பி ஒரு குடும்பமே இருப்பதை அறிந்து என்ன செய்யப்போகிறோம்? என்பது தெரியாமல் தவித்து வந்துள்ளார்.

கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தாலும், அவரது மனைவியும் சூழ்நிலையை புரிந்து கொண்டு பணிக்கு சென்றுள்ளார். ஆனால் குடும்பத்தின் பணத் தேவையை சமாளிக்க முடியாத நிலையில், சஞ்சீவனும் பல நிறுவனங்களுக்கு நேர்முகத்தேர்விற்கு சென்று வந்துள்ளார்.

கடனும் அடுத்தடுத்து அதிகரித்து செல்ல, எதற்ச்சையாக நவம்பர் 22 ஆம் தேதி லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார். இதன் பின்னர் வழக்கம்போல பணியாற்றி வந்த நிலையில், நவநீதன் வாங்கிய லாட்டரிக்கு இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய் பரிசு தொகையாக வளர்ந்துள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.