பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வார எவிக்சன்.?! சீக்ரெட் ரூம் யாருக்கு.?! – சுவாரஸ்ய தகவல்கள் கசிந்தது.!

பிக் பாஸ் சீசன் 4


பிக் பாஸ் சீசன் 4 வது நிகழ்ச்சி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. கடந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் அன்பு என்ற பெயரில் ஆளுமை செய்த அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறப் போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதுகுறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா மற்றும் அனிதா ஆகியோரை நாமினேட் செய்தனர்.


அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் நச நசவென்று பேசியே அனைவரையும் கடுப்பேற்றும் அனிதாதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்தவாரம் சக போட்டியாளர்களிடம் அனிதா மிக கடுமையாக நடந்து கொண்டார்.

எனவே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் குறைவானவர்களே ஓட்டுக்களை போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிதா பிக்பாஸ் ரசிகர்களின் மனதை கவரவில்லை.

அத்துடன் நிகழ்ச்சியில் லொட லொட என்று பேசிக்கொண்டே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அவர் குறைக்கிறார். இதனால், அவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அத்துடன் இப்படி நிகழ்ச்சியின் சுவாரசியத்தை குறைப்பதால் பிக்பாஸே வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுவார் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த சீசனில் யாரும் இதுவரை சீக்ரெட் ரூமுக்குள் அனுப்பப்படவில்லை. எனவே, அனிதா அந்த ரூமுக்கு போக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. எனவே, இந்த வாரம் அனிதா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே போக போகிறாரா அல்லது சீக்ரெட் ரூமிற்குள் போக போகிறாரா என்பது நாளை தெரியவரும்.