வனிதாவின் 5-வது காதல்., ரகசியம் உடைந்தது.! இது தான அந்த விஷயம்.?!

வனிதா

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் வைரசை விட வனிதா வீட்டு பஞ்சாயத்து தான் பெருமளவில் பரவியது. கோலிவுட் வட்டாரங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது வனிதா பீட்டர் பால் திருமணம் தான்.

பீட்டர் பாலை வனிதா 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டார். முதன்முதலில் நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

தொடர்ந்து அவரை விவாகரத்து செய்துவிட்டு ஆனந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அதன் பின்னர், அவரிடமும் விவாகரத்து பெற்ற வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரை காதலித்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.

பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வனிதா பிரிந்துவிட்டார். தொடர்ந்து, பீட்டர் பாலை மூன்றாவது முறையாக வனிதா திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் செய்த சில மாதங்களில் இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, சமீபத்தில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலில் விழுந்ததாக பதிவு செய்து நடிகர் யார் ஸ்கான் மனைவி உமா ரியாஸ்கான்-ஐ டேக் செய்து இருந்தார். இதனை ரசிகர்கள் சகட்டுமேனிக்கு வறுத்து எடுத்து கமெண்ட் செய்தனர்.

இந்த நிலையில், வனிதா நடிகை உமா ரியாஸ் நடத்தும் யூடுயூப் சேனலில் கலந்து கொண்டார். உமா ரியாஸின், சவாலை வனிதா ஏற்றுக் கொண்டதன் காரணமாக தான் இது போல பதிவிட்டதாக அவர் தெரிவித்து இருந்தார்.