படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கீர்த்தி சுரேஷ் ஓட்டம்.! இது தான் காரணமா.?!

கீர்த்தி சுரேஷ்

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து தற்பொழுது பெரிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினியின் அண்ணாத்த தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா, ரங்தே உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பிரச்சினையால் நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தனது நெருங்கிய தோழியான சலோனி என்பவரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். எப்பொழுதும் பிரெண்ட்ஷிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் கீர்த்தி சுரேஷ்.

இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ரங்தே படத்தின் படப்பிடிப்பில் இருந்து அனுமதி பெற்றுக்கொண்டு கீர்த்தி சுரேஷ் கேரளா வந்து சென்றதாக கூறப்படுகிறது. இது அவரது நண்பர்கள் வட்டாரத்தில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கீர்த்தி சுரேஷின் தோழி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.