முல்லைத்தீவு ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட கொரோனா நோயாளி! அதிகளவானவர்களுக்கு பரவியிருக்கக்கூடிய அபாயம்!

கொரோனா

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் நேற்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர் ஆலய வழிபாடு ஒன்றில் பங்குகொண்ட தகவல் வெளியாகியுள்ளது.


ஐயப்பன் விரதத்தில் ஈடுபடுகின்ற புதுக்குடியிருப்பு தொற்றாளர் ஆலயத்தில் நேற்று வழிபட்டார். அவர் நேற்றுறு ஐயப்பன் விரத இறுதிநாள் வழிபாட்டிற்காக குறித்த ஆலயத்திற்கு சென்றிருக்கின்றார் என்று தெரியவருகின்றது.

புதுக்குடியிருப்புக்கும் – கைவேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படுகின்ற குறித்த ஆலயத்தில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 40இற்கும் மேற்பட்டவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

இதேவேளை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதன் தொடராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்கு தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது, வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது , அது அதிகளவானவர்களுக்கு பரவியிருக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தொற்றாளர் தனக்கு நெருக்கமானவர்கள் என்று 24 வரையான நபர்களை அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பிந்திக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தின.