வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை.! புகைப்படத்தால் அதிர்ந்த ரசிகர்கள்.!

வெண்ணிற ஆடை மூர்த்தி

நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி 1965-ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமானவர். இவர் வழக்கறிஞர் படிப்பு முடித்து இருந்தாலும் கூட, நடிப்பின் மீது தீராத ஆசை ஏற்பட்டதால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் திரையுலகம் பல நகைச்சுவை நாயகர்களை கண்டிருந்தாலும் கூட வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடிகள் தனித்துவமானவை. ரஜினி, கமல், சிவாஜி, விஜயகாந்த், அஜித் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இவர் குணச்சித்திர வேடத்திலும், சில படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் கூட நடித்திருக்கின்றார்.

அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் போன்ற படங்களில் இவரது வில்லத்தனம் வேற லெவலில் இருக்கும். சீவலப்பேரி பாண்டி படத்தில் இவரது நகைச்சுவை அனைவரையும் வெகுவாக ரசிக்க வைத்தது. இவர் இதுவரை திரையுலகில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கின்றார்.

தற்போது இவரது உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் இரண்டு வருடங்களாக நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த நிலையில், தற்போது அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இவர் தனது 83வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றார்.

தனது சிரிப்பின் மூலமாக திரை உலக மக்கள் அனைவரையும் கட்டிப் போட்ட வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலையை கண்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வயதாகி விட்டதால் தற்போது அவர் மோசமான நிலையில் இருக்கின்றார். அவரது புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.