இன்றைய ராசிபலன்: 28.12.2020: மார்கழி மாதம் 13ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

டிசம்பர் 28,2020


இன்று!
சார்வரி வருடம், மார்கழி மாதம் 13ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 13ம் தேதி,
28.12.2020, திங்கட்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி காலை 7:13 வரை
அதன்பின் சதுர்த்தசி திதி, ரோகிணி நட்சத்திரம் மாலை 4:46 வரை,
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
பொது : சிவன் வழிபாடு

மேஷம்:

தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். தொழில் தொடர்பான முதலீடுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். வயதில் மூத்தவர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும்.

ரிஷபம்:

சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இலாபம் மேம்படும். மனதில் இருக்கும் புதிய எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவீர்கள்.

மிதுனம்:

பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சேமிப்புகளை அதிகப்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும்.

கடகம்:

தொழில் தொடர்பான புதிய சிந்தனைகள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்:

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் செல்வதற்கான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

கன்னி:

மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் இலாபம் மேம்படும். விவசாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.

துலாம்:

வியாபாரம் தொடர்பான பணிகளின் மூலம் அலைச்சலும், பதற்றமும் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளின்போது கவனம் வேண்டும். அரசு தொடர்பான பணிகளில் காலதாமதம் ஏற்படும்.

விருச்சகம்:

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

தனுசு:

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் கடன் பிரச்சனைகளை குறைக்க இயலும்.

மகரம்:

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். மனை சார்ந்த பணிகளில் இலாபம் உண்டாகும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்:

வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நுட்பமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் செய்யும் சில மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.