பிக்பாஸுக்கு எதிராக அர்ச்சனா.!? மதுமிதா போல புதிய பூகம்பமா.!?

அர்ச்சனா

கடந்த அக்டோபர் 4ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் துவங்கியது. 80 நாட்களை கடந்து தற்போது மிகவும் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக vj அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சக போட்டியாளர்களுடன் குரூப்பிஸம் செய்து வருவதாக பலராலும் குற்றம் சாட்டப்பட்டது. ரசிகர்களும் அதே மன நிலையில் இருந்ததால் வெறுப்பை சம்பாதித்தார். இதனை தொடர்ந்து அவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் சமையல், என்டர்டெயின்மென்ட் என்று நிறைய விஷயங்களில் கவனம் செலுத்துனீர்கள். ஆனால், ஆரியிடம் அன்பை காட்டுவதை மட்டும் நிறுத்தி விட்டீர்கள் என்று கூறினார்.

அதற்கு அர்ச்சனா ஆரியிடம் அன்பு காட்டியது உங்களிடம் காட்டப்படவில்லை. இதுதான் பிக் பாஸ் என்று வெறுப்பாக தெரிவித்துள்ளார். அப்பொழுது வேண்டுமென்றே அர்ச்சனாவை பிக்பாஸ் வில்லியாக காட்டியதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

முன்னதாக மதுமிதா நடிகை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்து பிக்பாஸ் க்கு எதிராக பேசியதால் பிரச்சனைகளை சந்தித்தார். அது போல அர்ச்சனாவும் சந்திப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.