பிக்பாஸ் வீட்டில் செல்போனை மறைத்து பயன்படுத்தும் சோம்.! தீயாக பரவும் வீடியோ.!

சோம்

தங்களது டிஆர்பி ரேட்டிங்கை தூக்கி நிறுத்த ஒவ்வொரு வருடமும் விஜய் தொலைக்காட்சி பயன்படுத்தி வரும் யுக்தி பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் அக்டோபர் 4ஆம் தேதி துவங்கியது. தற்போது 75 நாட்களை கடந்து கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி, திட்டமிட்டு நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிதான் என்று கூறப்பட்டது. தற்போது இதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு வெளி உலகத்தோடு எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பார். செல்போனுக்கு அனுமதி இல்லை. இதுதான் முக்கிய விதிமுறை.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பப்பட்ட எபிசோடில் சோம் சேகர் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருப்பது போல இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியின் போது கமல் அனிதாவை கண்டித்துக் கொண்டிருந்தார். அப்போது அனிதா அதற்கான விளக்கத்தை அவரிடம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது பதிவு செய்யப்பட்ட கேமராவில் சோம் சேகர் எதையோ குனிந்து கொண்டு நோண்டிக் கொண்டிருப்பது போல காட்டப்படுகிறது.

அவர் செல்போன் பயன்படுத்துகிறார் என்று நெட்டிசன்கள் ஆணித்தனமாக கூறி இணையத்தில் இதை விவாதப் பொருளாக மாற்றியுள்ளனர். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ஸ்க்ரிப்டடு கான்செப்ட் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை உண்மையாக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.