முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு வர்த்தகர்களுக்கான அவசர அறிவித்தல்!

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் மரக்கறி மொத்த வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் புதுக்குடியிருப்பு பகுதிகளில் இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் இயங்குகின்ற சகலவிதமான வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியாற்றுகின்ற அனைவரையும் பி.சி. ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இவர்களுக்கான பி. சி. ஆர் பரிசோதனைகள் நாளை மறுதினம் புதன்கிழமை இடம்பெறுமெனவும் தவறாது அனைவரும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்யாமல் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த வர்த்தக நிலையங்கள் மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.