வெளியேறிய அனிதா., பிரபா வெளியிட்ட உருக்கமான பதிவு.! ரசிகர்கள் உற்சாகம்.!

அனிதா

பிக்பாஸ் பிரபலமாக உள்ள அனிதாவுடைய கணவர் பிரபா தனது சமூக வலைத்தள பக்கத்தில் என்னுடைய தேவசேனா திரும்பி வந்து விட்டாள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கியது. இதில் 16 போட்டியாளர்களில் அனிதா கலந்து கொண்டார். செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

நேற்றைய எபிசோடில் அவர் குறைவான வாக்குகளை பெற்றதால் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் எந்த அணியிலும் சேராமல் தனித்துவமாக விளையாடி வந்தார். ஆனால், எந்த ஒரு விஷயம் பேசினாலும் நச நசவென்று அதிகமாக பேசுவதால் ரசிகர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் இம்சையாக மாறி இருந்தார்.

மேலும், அதிகமாக பேசி நிகழ்ச்சியில் சுவாரசியத்தை இவர் குறைப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் அனிதாவுக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் சமூக வலைதளங்களில் தனது மனைவிக்கு ஆதரவாக பிரபாகரன் பதிவிட்டு வருவார்.

இந்நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அனிதா குறித்து பிரபா தனது சமூக வலைத்தள பக்கத்தில் என்னுடைய தேவசேனா திரும்பி வந்து விட்டாள் என்று பதிவிட்டு இருக்கிறார்.