எதுக்கு இந்த ஷோ க்கு வந்தா.? சகட்டுமேனிக்கு ஷிவானியை திட்டி தீர்க்கும் தாய்.! வைரல் வீடியோ.!

ஷிவானி

கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தற்போது 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக செல்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பகாலத்தில் மிகவும் சுவாரஸ்யம் இன்றி சென்றது. ஆனால், தற்போது இறுதி கட்டத்தை எட்டும் நிலையில், மிக விறுவிறுப்பாக செல்கிறது.

எதிர்பாராத விஷயங்கள் பலவும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. வைல்ட் கார்டு வழியாக உள்ளே நுழைந்த அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் குரூப்பிஸத்தை தோற்றுவித்ததன் காரணமாக ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நச நசவென்று வீட்டிற்குள் பேசிய நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை குறைத்த அனிதாவும் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். நேற்று மீண்டும் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது முதல்முறையாக ஷிவானியின் தாய் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். தன்னுடைய மகளை கட்டி அணைத்து அழுத அவர் அதன் பின்னர் வேறு யாருடனும் பேசவில்லை. ஷிவானியை தனியாக அழைத்துச் சென்று பேசும்பொழுது கடும் கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

இதற்கு காரணம், அதிக நபர்களால் ஷிவானி வெறுக்கப்பட்டார் என்பது தான். எந்த தப்பும் செய்யாமல் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார். அத்துடன் பாலாவுடன் அவர் செய்யும் ரொமான்சும் இந்த கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது இதற்கான புரோமோ வீடியோ வெளியாகி வருகிறது.