ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

ஜனாதிபதி

நாட்டில் ம.துபா.னம் மற்றும் எதனோல் உற்பத்திக்காக சோளம் பயன்படுத்துவதை முழுமையாக முற்றிலுமாக தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வெளியிடுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலால் வரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள், சோளம் உள்ளிட்ட விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்குவதில் முறைகேடுகளைத் தடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

உள்ளூர் விவசாயிகள் மஞ்சள் மற்றும் சோளம் சாகுபடியை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளதாகவும், அடுத்த பருவ அறுவடை நெருங்கி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.