பிகில், மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்!

அருண் அலெக்சாண்டர்

பிரபல டப்பிங் கலைஞரும், திரைப்பட நடிகருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் நேற்று காலமானார்.

சென்னையை சேர்ந்த அருண் அலெக்சாண்டர் கடந்த பத்து வருடங்களாக டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்தார். அவதார் உள்ளிட்ட உலக புகழ் பெற்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மாநகரம், கோலமாவு கோகிலா, பிகில், கைதி போன்ற பிரபல நடிகர்களின் படங்களில் அருண் அலெக்சாண்டர் நடித்துள்ளார்.

இந்நிலையில், உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நேற்று அருண் அலெக்சாண்டர் உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையினருக்கும், டப்பிங் கலைஞரையும் அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது திரைத்துறை இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.