பிரபல சீரியல் நடிகருக்கு திருமணம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

சீரியல் நடிகருக்கு திருமணம்

கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் ராகுல் மாடலிங் துறையில் இருந்து திரைத்துறையில் கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமானார். நடிகர் மலையாளத்தில் ஃபகத் பாசில், துல்கர் சல்மான் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் பொன்னம்பிளி என்ற சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

தமிழ் சின்னத்திரையுலகில் சன் டிவியில் ‘நந்தினி’ என்ற சீரியலில் ஹீரோவாக ராகுல் அறிமுகமானார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ராகுல் கவர்ந்தார். இதனை தொடர்ந்து பாட்ஷா பட இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணாவின் ‘சாக்லேட்’ என்ற சீரியலிலும் ஹீரோவாக நடித்தார்.

கொரோனா ஊரடங்குக்கு பின் சில காரணங்களால் இந்த சீரியல் நிறுத்தப்பட்டதாக சன் தொலைக்காட்சி அறிவித்தது. தற்போது ராகுல் சன் டிவியின் ‘கண்ணான கண்ணே’ தொடரில் யுவா கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இத்தொடர் தற்போது சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சமீபத்தில் ராகுல் மாடலான லக்ஷ்மி நாயரை திருமணம் செய்ய போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ராகுல் மற்றும் லட்சுமி நாயருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வாழ்த்துக்களை பெற்று வருகின்றது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamizh Serials (@tamil_serials_)