இலங்கையில் வயதில் கூடிய பெண்: மூதாட்டி வேலு பாப்பாத்தி காலமானார்!

வேலு பாப்பாத்தி


நாட்டின் ஆகக்கூடிய வயதை கொண்ட பெண் களுத்துறை நாவல பெரிய வைத்தியசாலையில் நேற்று மாலை காலமானார்.

இ.ற.க்.கு.ம் போது இவருக்கு 117 வயது.

தொடாங்கொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மெஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவில் வேலு பாப்பாத்தி என்ற முதாட்டியே இவ்வாறு காலமானார். 1903ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி பிறந்த இவர் பெருபான்மை வாலிபரை திருமணம் செய்துள்ளதுடன் இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவரது பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் இதுவரை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் முதியோர் அடையாள அட்டையில் இவரது வயது குறிப்பிடப்பட்டுள்ளது. முதியோருக்கான தேசிய சபை இவருக்கு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தில் நாட்டின் ஆகக்கூடிய வயதை கொண்ட பெண் என்ற சான்றிதழை வழங்கியுள்ளது.