கணவரை இழந்து தவிக்கும் பெண்.. 6 மாதமாக தொடரும் ம.ர்.ம.ம்..!

இந்தியா
கடலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் நித்தி நத்தம் கிராமத்தைச் சார்ந்தவர் சுந்தரவேல். இவர் மலேசியாவில் ஜே.சி.பி ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி இயக்கப்பட்ட சிறப்பு விமானம் மூலமாக மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், கொரோனா பரிசோதனைக்கு பின்னர் தனிமைப்படுத்திக் கொள்ளும் பொருட்டு தேனாம்பேட்டையில் இருக்கும் ஹயாத் நட்சத்திர விடுதியில் சொந்த செலவில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், இரண்டு, மூன்று நாட்களாக கணவரிடமிருந்து எந்தவிதமான அழைப்புகளும் வராததால் சந்தேகம் அடைந்த மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் நட்சத்திர விடுதி நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால், அங்கும் எந்த விதமான பதிலும் வரவில்லை. இதனால் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், ஹயாத் நிர்வாகம் தரப்பில் கடந்த இரண்டு நாட்களாக சுந்தர வேலை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி சுந்தரவேல் விடுதியின் கழிவறையில் ச.ட.ல.மா.க கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், ம.ர.ண.த்.தி.ற்.கா.ன பி.ரே.த பரிசோதனை அறிக்கை நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் வெளியாகாத நிலையில், சுந்தர்வேலின் ம.ர.ண.த்.தி.ற்.கா.ன ம.ர்.ம.ம் தெரியாமல் இருந்துள்ளது.

கைக்குழந்தையுடன் அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வரும் அவரது மனைவி சந்திரா, விழிபிதுங்கி கண்ணீருடன் இருக்கிறார். மேலும், கடந்த அக்டோபர் மாதம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தாலும், தடயவியல் பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. தனது கணவருக்கு என்ன ஏற்பட்டது? என்பது குறித்த உண்மை தெரியாமல் சந்திராவும், அவரது குடும்பத்தினரும் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவருக்கு உரிய நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.