பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தமே ஆரியிடம் இதைக்கேட்ட கேப்ரில்லாவின் தாய்.. பரபரப்பில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 87 நாட்களை கடந்த நிலையில் போட்டியாளர்கள் இனி யார் யார் அடுத்தடுத்து வெளியேற போவர்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து, தற்போது சென்றுகொண்டிருக்கும் ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் உள்ளே வந்து சர்ஃப்ரைஸ் கொடுத்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் கேப்ரில்லாவின் தாய் உள்ளே நுழைந்தார்.

பின்னர், ஆரியிடம் பேசும் போது உங்களை நான் நெடுஞ்சாலை படத்தில் பார்த்திருக்கேன் என பேசிவிட்டு, பின்னர் கேபியிடம் நீ டாஸ்க் பண்ணற ஆனா அதுலயும் தனிப்பட்ட முறையில் செய் என கூற, அதற்கு கேபி இங்க இருக்க போட்டியாளர்கள் எல்லோருக்கும் நல்லா பண்ணாலும் கண்ணு தெரிய மாட்டிக்குது என கூறியுள்ளார்..