இன்றைய ராசிபலன்: 01.01.2021: மார்கழி மாதம் 17ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜனவரி 01,2021


இன்று!
சார்வரி வருடம், மார்கழி 17, 1.1.2021, வெள்ளிக்கிழமை,
தேய்பிறை, துவிதியை திதி காலை 9:59 வரை,
அதன்பின் திரிதியை திதி, பூசம் நட்சத்திரம் இரவு 8:53 வரை,
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்
பொது : மகாலட்சுமி வழிபாடு, ஆங்கிலப்புத்தாண்டு.

மேஷம்:

அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

ரிஷபம்:

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

கடகம்:

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் உண்டாகும். போட்டி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களின் உதவிகள் மூலம் தடைபட்ட சில செயல்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும்.

சிம்மம்:

மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், புரிதலும் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி:

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் ஈடேறும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்:

எதையும் சமாளிக்கும் மனோபக்குவமும், தைரியமும் மேம்படும். பெற்றோர்களிடத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சகம்:

உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அலுவலகம் தொடர்பான பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை மேம்படும். வாகனங்களை சரி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபமும், அறிமுகமும் கிடைக்கும்.

தனுசு:

சிறு சிறு விஷயங்களை அலைச்சலுக்கு பின்பே செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குறுதிகள் தருவதை தவிர்க்கவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களிடம் கனிவுடன் பழகவும்.

மகரம்:

நண்பர்களின் உதவிகள் மூலம் தனவரவுகள் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விருப்பமானவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். போட்டிகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள்.

கும்பம்:

நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

மீனம்:

பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நுட்பமான விஷயங்களில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும்.