சிறுமிக்கு தாலி கட்டி சிறைக்கு சென்ற காதலன்.! மீண்டு வந்து., மீண்டும் தாலி கட்டிய சம்பவம்.!

இந்தியா

சேலத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய காதலன், போக்சோ சட்டத்தில் சிறைக்கு சென்று, சிறுமிக்கு திருமண வயது வந்ததும் மீண்டும் தாலி கட்டி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், இவர் டிப்ளமோ முடித்து விட்டு அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரும் முத்துநாயக்கன் பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகள் திலகவதி என்பவரும் முகநூலின் மூலம் காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்போது சிறுமிக்கு வயது திருமண வயது இல்லை என்பதால், போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளியில் வந்த தினேஷ்குமார், திலகவதிக்கு திருமண வயது ஆனவுடன், அவருக்கு மீண்டும் தாலி கட்டி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் திலகவதியின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு அழைத்து, பெண்ணுக்கு திருமண வயது என்பதால் அவர்களுக்கு அறிவுரை கூறி, திலகவதியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.