தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகர் காலமானார்.. சோகத்தில் திரைத்துறையினர்.!!

பிரபல நடிகர்

பிரபல தெலுங்கு நடிகர் நர்சிங் யாதவ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். காமெடி வில்லன் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்துள்ளார். தமிழில் பாட்ஷா, பூஜை, ராஜபாட்டை, ஆட்டநாயகன், லாடம், குருவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். மேலும் சிறுநீரகப் பிரச்சினை அவருக்கு இருந்துள்ளது. இதன் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்தபோது திடீரென சுயநினைவை இழந்தார்.

இதையடுத்து, சோமாஜிகுடா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வந்தார்.

பின்னர் அவர் வீடு திரும்பினார். இரண்டு நாட்களுக்கு முன்பு டயாலிசிஸ் செய்வதற்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு திடீரென அவர் உடல்நிலை மோசமானது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்றிரவு அவர் உயிரிழந்தார். தற்போது இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.