பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி மாற்றம்.! விஜய் டிவியின் முக்கிய அறிவிப்பு.!

பிக்பாஸ்

சர்ச்சைகளுக்கு பெயர் போன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. தற்போது தமிழில் பிக் பாஸ் சீசன் இன்னும் 2 வாரங்களில் முடிய உள்ளது. அதனால் போட்டியாளர்களின் உறவினர்களின் வருகையும் முடிவடைந்துள்ளது.

இனிவரும் நாட்கள போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பரபரப்பை ஏற்படுத்தும் போட்டியாளர்கள் தற்போது உள்ளே இல்லாததால், அந்த அளவுக்கு சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதுவும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில், வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை பிக் பாஸ் சீசன் 4 இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான நிலையில், இந்த நேரத்தில் ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிக்பாஸ் ரசிகர்கள் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் நேரம் என்னவாக இருக்கும் என குழம்பி உள்ளனர். ஒருவேளை 10 மணிக்கு மேல் மேல் பிக் பாஸ் ஒளிபரப்பினால், நிகழ்ச்சியைப் பார்ப்பது சற்று கடினமாக இருக்கும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.