இன்றைய ராசிபலன்: 03.01.2021: மார்கழி மாதம் 19ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜனவரி 03,2021


இன்று! சார்வரி வருடம், மார்கழி 19, 3.1.2021, ஞாயிற்றுக்கிழமை,
தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 8:24 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, மகம் நட்சத்திரம் இரவு 8:07 வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : சூரியபகவான் வழிபாடு

மேஷம்: அசுவினி: எதிர்பாலினரிடம் பழகும்போதும், பேசும்போதும் கவனம் தேவை.
பரணி: திருப்தியான நாளாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
கார்த்திகை 1: அலுவலகப் பணிகளில் நிதானமாக செயல்படுவது நல்லது.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முயற்சிகளில் வெற்றி வரும். எதிர்பார்த்த நன்மை நிகழும்.
ரோகிணி: குடும்பக் கவலைகள் மறையும். செலவை சமாளிக்க முடியும்.
மிருகசீரிடம் 1,2: பணவரவு நன்றாக இருக்கும். காதலர்களுக்கு உதவி கிடைக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: ஆன்மிக எண்ணங்கள் உருவாகும். தேவையற்ற பயம் தீரும்.
திருவாதிரை: வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டு. கனவு நனவாகும்.
புனர்பூசம் 1,2,3: இளைஞர்களுக்கு சிறிய வெற்றி ஏற்படும். மனநிறைவு உண்டு

கடகம்: புனர்பூசம் 4: அலுவலகத்தில் உள்ள நிலுவைப் பணிகளை முடித்துக் காட்டுவீர்கள்.
பூசம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும்.
ஆயில்யம்: பகையைவிடுத்து நட்பாவது பற்றிச் சிந்திப்பீர்கள். லாபம் உயரும்.

சிம்மம்: மகம்: மதிப்பும், மரியாதையும் கூடும். பிறரது செயல்கள் கோபத்தை தூண்டலாம்.
பூரம்: நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். திறமை கூடும்.
உத்திரம் 1: சக பணியாளருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்

கன்னி: உத்திரம் 2,3,4: வேண்டப்பட்டவரின் உடல்நலம் மேம்படும். வீடு கட்டுவீர்கள்.
அஸ்தம்: எந்த பிரச்னையையும் சமாளிக்கும் தைரியம் ஏற்படும்.
சித்திரை 1,2: வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். கடன்கள் இனி இல்லை.

துலாம்: சித்திரை 3,4: இதுவரை கஷ்டப்படுத்திய மேலதிகாரி மாற்றலாகிச் செல்வார்.
சுவாதி: கொஞ்சம் சேமிக்க முடியும். கற்பனை பயங்களால் சிரமப்படுவீர்கள்.
விசாகம் 1,2,3: அலுவலகப் பணிகளில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும்.

விருச்சிகம்: விசாகம் 4: இடமாற்றம் உண்டாகலாம். பணிகளை முயற்சியால் முடிப்பீர்கள்.
அனுஷம்: மற்றவருக்காக கூடுதல் உழைப்பை வெளிப்படுத்துவீர்கள்.
கேட்டை: கடந்த காலக் கவலைகள் திடீரென்று காணாமல் போகும்.

தனுசு: மூலம்: கற்பனை வளம் அதிகரிக்கும். காதல் கைக்கூடும் வாய்ப்புள்ளது.
பூராடம்: முந்தைய முயற்சிகளில் முன்னேற்றமான புதிய வழி கண்டறிவீர்கள்.
உத்திராடம் 1: சிலர் பணியிட வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுவார்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: மனஇறுக்கம் தீர்ந்துவிடும். தன்னம்பிக்கையுடன் இருங்கள்.
திருவோணம்: மின்சாரம் மற்றும் இயந்திரங்கள் பற்றி எச்சரிக்கை தேவை.
அவிட்டம் 1,2: பணியிடப் பொருளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

கும்பம்: அவிட்டம் 3,4: மேலதிகாரி உங்கள் விருப்பமறிந்து நடந்து கொள்வார்.
சதயம்: மதிப்பு மிக உயரும். முயன்ற விஷயம் நல்லபடியாக நடைபெறும்.
பூரட்டாதி 1,2,3: இத்தனை நாள் பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் நீங்கும்.

மீனம்: பூரட்டாதி 4: தேங்கியிருந்த விஷயங்களை முனைந்து முடித்து காட்டுவீர்கள்.
உத்திரட்டாதி: வியாபாரிகள் வட்டிக்கு வாங்கியிருந்த கடன்களை அடைப்பர்.
ரேவதி: பிள்ளைகளின் வாழ்வில் சாதனைத் திருப்பம் உண்டாகும்.