உணவுப் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு; பத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலை!

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலை

பத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெப்ரவரி மாதத்தில் இருந்து நிர்ணய விலை விதிக்கப்படவிருக்கிறது.

அரிசி, சீனி, மா, பருப்பு, ரின்மீன், நெத்தலி, உருளைக்கிழங்கு, முட்டை, கோழி இறைச்சி, வெங்காயம் ஆகிய அத்தியாவசியப் பொருட்களுக்கே இவ்வாறு விலை நிர்ணயிக்கப்படவிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இதற்கமைவாகஇ உள்ளுர்; உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் எதிர்வரும் சில தினங்களில் கோரப்படும்.

தரமான உணவுப் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு விரைவான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இந்த உணவுப் பொருட்களை சதொச கூட்டுறவு மற்றும் ‘கியுசொப்’ வலையமைப்பின் ஊடாக மக்களுக்கு விநியோகிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.