தெறி பேபி நைனிகாவா இது.?! மீனா மகள் இப்போ எவ்ளோ வளர்ந்துட்டாங்க.!

நைனிகா

பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று வரை தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் மீனா. இவர் 90 காலகட்டங்களில் படு பிஸியாக படங்களில் நடித்து வந்தார். இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த மீனா திருமணம் ஆன பின்பு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

எனவே நடிப்பிற்கு பிரேக் போட்ட அவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் தற்போது நடித்து வருகின்றார். மீனாவின் மகள் நைனிகா தளபதி விஜயின் தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்து இருப்பார்.

இதனால் தமிழ் சினிமாவில் அவர் பிரபலமாகிவிட்டார். தெறி படத்தில் திறமையான, அழகான நடிப்பால் பலராலும் பாராட்டப்பட்டார். அத்துடன் அவரது திறமையான நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தெறி படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பெரிய அளவில் கவனத்தை படம் பெற்றுத்தரவில்லை. குழந்தையாக தெறி படத்தில் நடித்திருந்த நைனிகா தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meena Sagar (@meenasagar16)