பூவே பூச்சூடவா சீரியல் பிரபலங்களின் காதல்.! ஒரே பதிவில் காதலை கொட்டிய ஜோடிகள்.!

பூவே பூச்சூடவா

ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா மெகாத்தொடரின் மூலம், தமிழகத்தில் எண்ணற்ற ரசிகர்களின் மனதை கொள்ளயடித்தவர் ரேஷ்மா. மாநிறம்தான் என்றாலும் கூட இவர் சிரிக்கும்போது கன்னங்களில் விழும் அழகான குழி மற்றும் அழகான முகம் என்று அனைத்து ரசிகர்களையும் கிறங்கடித்து வருபவர்.

நடனமாடுவதை அடிப்படையாக கொண்டவர். அவ்வகையில் நடன நிகழ்ச்சி மூலமாக தனது அத்தியாயத்தை தொடங்கினார். கடந்த 2015 ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு மாடல் அழகிக்கான விழாவில் முதல் பத்து இடத்திற்க்குள்ளாக வந்திருந்தார். அதே போல் கடந்த 2016ம் ஆண்டு நடந்த அதே போன்று ஒரு விழாவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ஷோவில் அறிமுகமானார்.

இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் மேடைதான் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து தான் இவருக்கு பூவே பூச்சூடவா மெகாதொடரில் சக்தி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இதே சீரியலில் சுந்தர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மதன். விஜய் தொலைக்காட்சி கனா காணும் காலங்கள் மூலம் பிரபலமடைந்த மதன் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். ஒரே சீரியலில் நடித்துவருகின்ற ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் தற்போது காதலில் விழுந்துள்ளனர்.

இதுகுறித்து மதன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ரேஷ்மாவும், ஆம் எனது கடைசி பெயரை மாற்ற போகிறேன் என ஆமோதித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @iamMadhanpandian (@madhanpandian)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @RESHMA_MURALIDARAN (@reshma_muralidaran_official)