கட்டுநாயக்க விமான நிலையங்கள் எப்போது திறக்கப்படும் : திகதி அறிவிப்பு!!

கட்டுநாயக்க விமான நிலையம்


கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட விமான நிலையங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார். விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து பயணிகளுக்காகவும் வர்த்தக விமானங்களுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் கட்டுநாயக்க உட்பட விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தி, சுகாதார பிரிவினர் கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அத்தோடு ஜனவரி 22 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு வரும் அனைத்து வர்த்தக விமானங்களுக்கு நாட்டுக்குள் வர சந்தர்ப்பம் வழங்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். பாதுகாப்பு முறைகளை கையாண்டு நாட்டை திறக்க வேண்டும் என்றார்.