யாழ்
யாழ்ப்பாணம் புலோலியில் காய்ச்சல் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் 7 ஆம் இலக்க விடுதியில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட நபருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்தவர்.
கடந்த மூன்று நாள்களுக்கு முன் மருதனார்மடத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகத்துக்கு சென்றிருந்ததாகவும் அங்கு குடிதண்ணீர் குடித்ததாக அவர் சுகாதாரத் துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருதனார்மடம் கொத்தணி: மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று!
மருதனார்மடம் கொத்தணியில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்ககழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் இன்று 240 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ஐவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மூவரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இருவரும் உள்ளடங்குகின்றனர்.
இரண்டாம் கட்டப் பரிசோதனையின்போதே குறித்த நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.