மண்ணெண்ணெயை ஜூஸ் என நினைத்த குழந்தை.. அரங்கேறிய சோகம்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!

இந்தியா

திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி காமாட்சிபட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு ஜீவா என்ற ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி மதிய நேரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஜீவா, அடுப்புக்காக வைக்கப்பட்டு இருந்த மண்ணெண்ணெயை ஜூஸ் என நினைத்து தவறாக குடித்துள்ளான்.

இதனால் சிறிது நேரத்தில் கு.ழ.ந்.தை ம.ய.ங்.கி வி.ழு.ந்.த.து.ம், ப.த.றி.ப்.போ.ன தாய் குழந்தையை தூ.க்.கி.ய சமயத்தில், குழந்தையின் வாயில் மண்ணெண்ணெய் வாசனை அடித்துள்ளது.

இதனையடுத்து குழந்தை ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்திருப்பதை புரிந்துகொண்ட சுகன்யா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அங்குள்ள தண்டலைபுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குழந்தைகள் வீடுகளில் இருக்கும் நேரத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள்களை குழந்தைகளின் கைக்கு எட்டும் வகையில் அல்லது அருகில் வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.