முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை – பொலிஸார் வெளியிட்ட க.டு.ம் எ.ச்.ச.ரி.க்.கை

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக க.டு.ம் சட்ட நடவடிக்கை

கொவிட் சூழ்நிலை காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது முகக்கவசம் அணியாமல் இருப்பது என்பது பொதுமக்களிடேயே மிகவும் சாதாரண நிலைமையாக மாறி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன கருத்து தெரிவிக்கையில், தற்போதைய கொவிட் நிலைமையை கட்டுப்படுத்த இது ஒருபோதும் பொருத்தமானதல்ல என்றும் இன்று முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுவரையில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான ஆண்டிஜன் பரிசோதனைகள் இதற்குப் பின்னர் ஏனைய மாகாணங்களிலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,000 க்கும் அதிகமாகவுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 467 நபர்கள்; இவ்வாறு பதிவாகியுள்ளனர்.

 

இதன்படி இதுவரையிலும் இலங்கையில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,242 ஆகும்.