யாழில் இரு மாணவர்களின் நற் செயல்; குவியும் பாராட்டு!

யாழ்ப்பாணம்

யாழில் இரண்டு மாணவர்களின் நேர்மையான செயல் தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்மஸ் தினத்தன்று பருத்தித்துறை கோட்டைவாசல் அம்மன் ஆலய முன்றலில் நின்று கைபேசியில் பேசிய நபர் புறப்படும் போது தொலைபேசி கீழே விழுந்துவிட்டது.

எனினும் அதனை கவனிக்காது குறித்த நபர் சென்றுவிட தொலைபேசியை இரு சிறுவர்கள் கண்டெடுத்தனர், ர்களில் அவ்ஒருவர் பருத்தி வேலாயுதம் தரம் 10-ல் கல்வி பயிலுகிறார், மற்றவர் நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் தரம் 08 மாணவர்கள். இருவரும் தொலைபேசி எடுத்த இடத்திலேயே 30 நிமிடம் காத்திருந்தனர்.

இந்நிலையில் தொலைபேசியை காணவில்லையென வேறு நண்பரின் தொலைபேசியில் இருந்து அழைப்பெடுத்த போது, அண்ணன் கீழே கிடந்து எடுத்தம், கோட்டை வாசல் அம்மன் முன் நிற்கிறோம் என்றார்கள்.

அதற்கு முன் சிலர் குறித்த தொலைபேசிக்கு அழைப்பை எடுத்தபோது அதற்குப் பதில் அளித்த சிறுவர்கள், அண்ணை தொலைபேசி கிழே கிடந்து எடுத்தோம், உரியவரை இவ்விடம் வரச் சொல்லியுள்ளார்கள்.

மிகச் சிறிய வயது ஆனால் மிகப் பெறுமதியான வேலை, அவர்களது வயதிற்கு இதனை வேறு ஏதாவது செய்திருக்க முடியும், ஆனால் மிக நேர்மையாக அதனை உரியவரிடம் ஒப்படைத்த முறை மிக நேர்த்தியான செயல் என சிறுவர்களுக்கு தொலைபேசிக்கு உரிய நபர் தனது முகநூலில் பாராட்டினை தெரிவித்துள்ளார்.

அத்துடன் விளையும் பயிரை முளையில் தெரியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இவர்கள்! இவர்களது பெற்றோர்கள் மற்றும் பாடசாலை இவர்களை சிறப்பாக வழி நடத்தியுள்ளனர்.

மேலும் எனது மிக அன்பான நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக, இவர்களைப் போல் எல்லாப் பிள்ளைகளும் சிறந்த பண்பு, ஒழுக்கம் நிறைந்த பிள்ளைகள் வளர வேண்டும், இது எம் ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்பும் என குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.