இலங்கையில் திருமண நிகழ்வினால் பாரிய ஆபத்தில் மக்கள்!

இலங்கை

இலங்கையில் திருமண நிகழ்வு ஒன்றினால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த திருமண நிகழ்வினால் மற்றுமொரு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் திகதி அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட கொரோனா பரவல் கொத்தணியாக மாறியுள்ளது.

இந்த பரவல் காரணமாக இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

திருமணத்தில் கலந்து கொண்ட பயாகல, பொத்துவல, ஹொரகஸ்கெலே ஆகிய கிராமங்களை சேர்ந்த இரு வீட்டு உறவினர்களும் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மணமகள் மற்றும் திருமண மண்டப ஊழியர்கள் சிலரும் இவர்களில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த கொரோனா பரவலுடன் தொடர்புடைய 150க்கும் அதிகமானோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.