மில்கோ செட்டிகுளம் பால் குளிரூட்டும் நிலையத்தினால் பயனாளிகளுக்கான நன்மை வழங்கும் நிகழ்வு!

மில்கோ

மில்கோ நிறுவனத்தின் செட்டிகுளம் பால் குளிரூட்டும் நிலையத்தில் அங்கத்துவம் வகிக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான நன்மைகள் வழங்கும் நிகழ்வு 06.01.2021 (புதன்கிழமை) நேற்றைய தினம் காலை 09.30 மணியளவில் புவரசங்குளம் முருகன் கோவில் மண்டபத்தில், மில்கோ வெளிக்கள உத்தியோகத்தோர் தலைமையில் நடைபெற்றது.

மில்கோ செட்டிகுளம் பால்குளிரூட்டும் நிலையத்தினால் மில்கோ சமூக பாதுகாப்பு நிதியத்தினுடாக பால் பண்ணனயாளர்களுக்கு அங்கத்தவர் மரணத்திற்கு 75000/= பெறுமதியான காசோலைகள், அங்கத்தவர் குடும்ப உறுப்பினர் மரணத்திற்கு 10000/=பெறுமதியான காசோலைகளும் மற்றும் பண்ணையார்களின் பண்ணையார்களின் ஏனைய நிகழ்விற்குரிய காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டன

அத்துடன் புல்லுகட்டைகள் வழங்கும் நிகழ்வு, பால் உற்பத்தியாளர் சுய பரிபாலன சங்கத்தின் செயலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும்  இடம் பெற்றது.

இதில் மில்கோ பிராந்திய முகாமையாளர் , உதவி முகாமையாளர் , வவுனியா செட்டிகுளம் கால்நடை வைத்தியர்கள், பூவரசங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி , மில்கோ வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பால் பண்னையாளர்கள் கலந்து கொண்டனர்.