கயல் ஆனந்தியின் கல்யாண புகைப்படம்.! மாப்ள சும்மா லட்டு மாதிரி இருக்காரு.!

கயல் ஆனந்தி

தமிழ் சினிமாவில் பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. இவர் சாக்லேட் நடிகரான ஹரிஷ் கல்யாண்-உடன் இணைந்து நடித்திருப்பார். கடந்த 2014இல் பொறியாளன் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.


தொடர்ந்து அவர் கயல் திரைப்படத்தில் நடித்தார். அதுதான் இவருக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து, அவர் கயல் ஆனந்தி என்று அழைக்கப்பட்டார். அதன்பின்னர், சண்டிவீரன் ,திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை போன்ற திரைப்படங்களில் ஆனந்தி நடித்திருந்தார்.

2018ல் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில், இன்றுநேற்று இரவு 8 மணிக்கு அவருக்கு ரகசிய திருமணம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவிவந்தது.

தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவர் தான் கயல் ஆனந்திக்கு மாப்பிள்ளை என்றும் கூறப்பட்டது. இது முழுக்க முழுக்க பெரியவர்களால் நிகழ்த்தப்படும் திருமணம் என்றும், காதல் திருமணம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மாப்பிள்ளை அவருக்கு ஏற்றார் போல லட்சணமாக தான் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.