செம்பருத்தி சீரியலில் மீண்டும் கார்த்திக் ராஜ்.! புது ஆதியால் ஏற்பட்ட புது பிரச்சனை.!

செம்பருத்தி

செம்பருத்தி சீரியலில் நடித்த ஜனனி அசோக் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, கதாநாயகனாக நடித்து வருகின்ற கார்த்திக் ராஜ் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகத் துவங்கின.

சில நாட்களாகவே ஒளிபரப்பான எபிசோடுகளில் கார்த்திக்ராஜ் இல்லாமல் மற்ற கதாபாத்திரங்கள் தான் இடம்பெற்றன. இந்த நிலையில், அவர் வெளியேற போவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இவ்வாறு மக்களின் ஆஸ்தான நாயகனாக இருக்கும் கார்த்திக் திடீரென விலகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இதில் விஜய் டிவி பிரபலமான அஸ்வின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது பிஹைண்வுட்ஸ் யூட்யூப் சேனலின் பிரபலம் அக்னி ஆதியாக நடிக்க தேர்வாகி இருப்பதாக அவரே கூறினார்.

ஆனால், இப்போது பிரச்னை என்னவென்றால் அக்னி நடித்த எபிசோட்கள் மக்களிடம் எடுபடவில்லை. கார்த்திக் ராஜ் சீரியலில் நடிக்கும் போது மிகவும் ஆணாதிக்கத்துடன் செயல்பட்டதாக உடன் பணிபுரிபவர்கள் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் அவரை சீரியலில் இருந்து நீக்கினர், அதுதான் உண்மை என்று நடிகை ஒருவரும் உறுதிபடுத்தினார்,

ஆனால் தற்போது சீரியலின் டிஆர்பி ரேட்டிங் படுமோசமாக இருக்கிறது என்பதால் மீண்டும் கார்த்திக்கை அதே சீரியலில் நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

செம்பருத்தி சீரியல் சர்ச்சைகள் குறித்து எதுவும் பேசாத கார்த்திக் ராஜ் முதல் முறையாக தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே நியாயம்தான் என்றும், சீரியலில் நியாயமாக செயல்பட்டவன் நான்தான். எனவேதான் அந்த வாய்ப்பு தன்னை மீண்டும் தேடி வந்துள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.