ரஜினியின் அடுத்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலா.!? விரைவில் வெளியாகவுள்ள தகவல்.!

லோகேஷ் கனகராஜ்


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து கைதி படமும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் உடனே அவர் இடம் பிடித்தார். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இளைய தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீசாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து ஆண்டவர் கமல் நடிப்பில் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில், மாஸ்டர் படம் வெளியாவது குறித்து அவர் ஒரு பேட்டியில், “கைதி படப்பிடிப்பின்போது, விஜய்க்கு மாஸ்டர் கதையை கூறினேன்.

படப்பிடிப்பை வேகமாக முடித்து ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக படம் பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய்-உடன் பணியாற்றியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது.

மேலும், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை இருக்கிறது.” என்று கூறியுள்ளார். இதுகுறித்து ரஜினி விரைவில் பதில் அளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.